தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகள் அளித்தப்போதும் , பள்ளிகள் மட்டும் கடந்த 9 மாதங்களாக திறக்கப்படவில்லை. பொதுத்தேர்வு காரணமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டது.  பொங்கல் விடுமுறைக்கு பின்பு 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.


இதனால் இரண்டு நாட்களாக, பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. பெறப்பட்ட கருத்துகளில்  70 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்கலாம் என்கிற கருத்தை பதிவு செய்திருக்கின்றனர் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது.


இந்த ஆதரவுக்கு காரணமாக பெற்றோர்கள் தெரிவித்து இருப்பது,10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இருக்கும் பொதுத்தேர்வுவை முக்கிய காரணமாக கூறியுள்ளனர். இந்த கருத்துகளை அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு சில தினங்களில் அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.