இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீடுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை விசாரிக்க கூடாது என்று  தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. 


மராத்தா இடஒதுக்கீடு வழக்கு விசாரணையில் இருந்தவரும் நிலையில், 69 சதவிகித இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக போட்டப்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த மனு மீது தமிழக அரசு எதிர் மனுவாக ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.


அந்த மனுவில் 69 சதவிகித இட ஒதுக்கீடு முறைக்கு, எதிரான வழக்குகளை வேறு எந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கக் கூடாது என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.