கடனாக வாங்கிய 3 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பித் தர முடியாத 23 வயது இளம் பெண்ணை, 60 வயது முதியவர் ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நீலகிரி மாவட்டம் நாடுகாணியை சேர்ந்த 60 வயதான பாலகிருஷ்ணன் என்பவர், அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார். 

அவர், பலருக்கும் பணம் கொடுத்து, வட்டிக்கு தகுந்தார் போல் அவ்வப்போது பணம் வசூலித்து வந்தார்.

இப்படியான நிலையில், அதே பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், தனது குடும்ப கஷ்டம் காரணமாக, பாலகிருஷ்ணனிடம் கடந்த ஆண்டு 3 ஆயிரம் ரூபாய் பணத்தை, வட்டிக்கு பெற்று உள்ளார்.

வட்டிக்கு பணம் வாங்கி நீண்ட காலமாகியும், அந்த 23 வயது பெண்ணால் வட்டி பணத்தையும் சரியாக செலுத்த முடியாமல், அசல் பணத்தையும் சரியாக செலுத்த முடியாமல் அந்த பெண் தவித்து உள்ளார்.

இதனால், அந்த பெண்ணின் வீட்டிற்குச் சென்ற 60 வயதான பாலகிருஷ்ணன், “நீங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், நான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று, விடாப்பிடியாக எழுதி வாங்கி இருக்கிறார். 

இதனால், வேறு வழியில்லாமல் அந்த இளம் பெண்ணும், பாலகிருஷ்ணனுக்கு அவர் கேட்டுக்கொண்ட படியே, எழுதிக் கொடுத்திருக்கிறார். 

இதனையடுத்து, அடுத்த சில நாட்களில், கடன் பெற்ற அந்த இளம் பெண்ணை 60 வயதான பாலகிருஷ்ணன், தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார்.

அதற்கு அந்த பெண் “ஏன்?” என்று கேட்கவும், “நீ எழுதிக் கொடுத்தது உனக்கு நினைவில்லையா? என்றும், எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு நீ சம்மதம் என்று எழுதிக் கொடுத்திருக்கிறாய்” என்று, நினைப்படுத்தி இருக்கிறார்.
 
இதனால், “அவர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?” என்று பயந்துகொண்டே அந்த பெண், பாலகிருஷ்ணன் வீட்டிற்குச் சென்று உள்ளார்.

அந்த பெண் அவரின் வீட்டிற்கு சென்றதும், வீட்டின் கதவைச் சாத்திக்கொண்ட அந்த 60 வயதான பாலகிருஷ்ணன், அந்த 23 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

பாலியல் இச்சைகள் எல்லாம் தீர்ந்த பிறகு, “இங்கு நடந்ததை நீ வெளியே சொன்னால், நான் உன்னை கொன்று விடுவேன் என்றும், அவற்றுடன், என்னிடம் நீ வாங்கிய பணத்தையும் வட்டியுடன் உடனே எனக்கு நீ தர வேண்டி இருக்கும்” என்றும், பயங்கரமாக மிரட்டியிருக்கிறார். 

இதனால், “இது பற்றி வெளியே சொன்னால் நமக்கு அசிங்கம் மற்றும் பிரச்சனை என்று யோசித்த அந்த பெண், “நம்மால் உடனே பணத்தைத் தர முடியாது” என்று யோசித்து, இதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல், இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கிறார். 

அந்த இளம் பெண் அமைதியாக இருப்பதை தனக்கு சாதகமாகப்  பயன்படுத்திக்கொண்ட 60 வயதான பாலகிருஷ்ணன், அந்த 3 ஆயிரம் ரூபாய்  பணத்துக்காக, அந்த பெண்ணை பல முறை தனது வீட்டிற்கு அழைத்துத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

60 வயதான பாலகிருஷ்ணனின் பாலியல் தொந்தரவுகள் ஒரு கட்டத்திற்கு மேல் எல்லை மீறி போகவே, அதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி அங்குள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இதையடுத்து, பாலகிருஷ்ணன் மீது பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு என இரு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் பணியில் போலீசார் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.