3 வது கணவருடன் பெண் வாழ்ந்து வரும் நிலையில், 2 வது கணவனுக்கு பிறந்த 6 வயது சிறுமியை, முதல் கணவனுக்கு பிறந்த மகன், தாத்தா, தாய்மாமனால் 
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கொடூரத்தின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.

வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற உச்சக்கட்ட பாலியல் வெறியாட்டம், தற்போது தமிழகத்தில் மெல்ல நுழைந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு பாலியல் வன்மம் அரங்கேறி அனைவரையும் அதிர வைத்திருக்கிறது.

சென்னை பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த அந்த 37 வயது பெண் ஒருவர், தன்னுடைய 3 வது கணவருடன் தற்போது தனிக் குடித்தனம் நடத்தி வாழ்ந்து வருகிறார். 

ஆனால், இந்த 37 வயது பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த மகனுக்கு தற்போது 16 வயது நடக்கிறது. அதே போல், இந்த பெண்ணின் 2 வது கணவருக்குப் பிறந்த மகளுக்கு தற்போது 6 வயது ஆகிறது. இதில், 2 வது கணவர் இறந்த விட்டார்.

இதனால், அந்த பெண் 3 வதாக ஒருவரை திருமணம் செய்துகொண்டு, தனது 3 வது கவருடன் தன்னந் தனியாக வாழ்ந்து வந்தார்.

இதனால், தன்னுடைய முதல் கணவருக்கு பிறந்த 16 வயது மகனையும், 2 வது கணவருக்கு பிறந்த 6 வயது மகளையும், தன்னுடைய தந்தையின் வளர்ப்பில் அவரது வீட்டில் விட்டு விட்டு, சென்றிருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில் தான், வேலியே பயிரை மேய்ந்த கதையாக, அண்ணன் முறையான முதல் கணவருக்கு பிறந்த 16 வயது சிறுவன், தனது தங்கை என்று நினைக்காமல் அந்த 6 வயது சிறுமியிடம் அத்து மீறி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறான்.

இந்த விசயம், அவரது தாத்தாவிற்குத் தெரிந்த நிலையில், தனது பேத்தி மீது சபலப்பட்ட அந்த தாத்தாவும், பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.

இதனையடுத்து, இந்த விசயம், சிறுமியின் தாய்மாமனுக்குத் தெரிய வந்த நிலையில், அந்த நபரும் சிறுமி மீது சபலப்பட்டு அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

இப்படியாக, 16 வயது அண்ணன் தொடங்கி, தாய்மாமன், தாத்தா என 3 பேரும் மாறி மாறி, அந்த 6 வயது சிறுமியைத் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்கள். இதில், அந்த சிறுமியின் உடல் நிலை முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, அந்த சிறுமி சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சிறுமியிடம் நடந்தது குறித்து விசாரித்து உள்ளனர்.

அப்போது, தனது சொந்த பந்தங்களால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, தனக்கு அன்றாடம் வீட்டில் நேரும் பாலியல் அவலங்கள் குறித்து, அழுதுகொண்டே கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், இது குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து விரைந்து வந்த போலீசார் 
மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், பாதிக்கப்பட்ட குழந்தையிடம் விசாரித்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், சிறுமியின் அண்ணன், தாய்மாமன், தாத்தா என 3 பேரையும் போலீசார் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சிறுமியின் 16 
வயது அண்ணன் செங்கல்பட்டில் உள்ள சிறார் கூர்நோக்கு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். 

அதே போல், சிறுமியின் தாய்மாமாவும், தாத்தாவும் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.