ராமநாதபுரம் அருகே வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 55 வயது பெண்ணை தாக்கி மயக்கமடையச் செய்து, மயங்கிய நிலையிலேயே இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  
இந்த சமூகத்தில் பாலியல் பலாத்கார சம்பங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று சொல்லாம். அந்த அளவுக்கு நாளுக்கு நாள் பாலியல் பலாத்கார சம்பங்கள்.. இந்த சமூகத்தில் பறந்தோடி நடக்கிறது.

அப்படி தான், ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அடுத்து உள்ள எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரது மனைவி 55 வயதான தெய்வானை,  கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனக்குச் சொந்தமான வயலில் வேலை செய்துகொண்டு இருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த ரவி என்பவர், 55 வயதான தெய்வானையைப் பார்த்துச் சபலப்பட்டு உள்ளார். இந்த சபல புத்தி, அவருக்குள் காமத்தை உசுப்பேற்றி விட்டதாக தெரிகிறது. இதனால், தெய்வானையை அழைத்து பேச்சு கொடுப்பது போல் கொடுத்து, அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார்.

அப்போது, அந்த பெண்ணும் அவனிடமிருந்து மீள முயன்று போராடி உள்ளார். இந்த போராட்டத்தில், அங்குக் கிடந்த கல்லை எடுத்து, அந்த பெண்ணின் தலையில் அவன் தாக்கியதில், அந்த பெண்ணுக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கிச் சரிந்து உள்ளார்.

அந்த பெண் மயங்கிய நிலையில் இருக்கும் போதே, அந்த பகுதியில் உள்ள ஒரு மறைவான இடத்திற்குத் தூக்கிச் சென்று, அந்த பெண்ணை மயங்கிய நிலையில் வைத்தே, அவன் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். காம வெறி தீர்ந்து போகவே, அந்த பெண்ணை அப்படியே உயிரோடு விட்டால், தனக்கு ஆபத்து என்று முடிவு செய்த அவன், அந்த பெண்ணை அப்படியே கொடூரமாகத் தாக்கி கொலை செய்து உள்ளான்.

இது தொடர்பாக, அந்த பகுதி வழியாகச் சென்ற பொது மக்கள், “இங்கு பெண்ணின் உடலம் காயங்களுடன் கிடப்பதாக” போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், உடலை பார்த்து உள்ளனர். அப்போது, அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகே கொலை செய்யப்பட்டு இருப்பதையும் உறுதி செய்தனர்.

இதனையடுத்து, பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சத்திரக்குடி போலீசார்,   விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த கொலை தொடர்பாக பரமக்குடி டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பரமக்குடி அருகே செங்கல் சூளையில் ஓட்டுநராக பணிபுரியும் ரவி, சம்பவத்தன்று பெண்ணின் தலையில் தாக்கி, பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, ரவியை கைது செய்து சத்திரக்குடி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.