கடந்த 4 ஆண்டுகளில் 10 வயது சிறுமி முதல் 80 வயது கிழவி வரை 40 பெண்களை பலாத்காரம் செய்த காமவெறியனை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள டங்கோரா நகை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தன் மகளின் அறையிலிருந்து சத்தம் வந்துள்ளதைக் கேட்ட, திடீரென்று அறைக்குள் நுழைந்து பார்த்துள்ளார்.

40 Women from 10-80 years molested in 4 years

அங்கு, தன் மகளை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்துள்ளான். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த தாய், செய்வதறியாது திகைத்துப் போய் நின்று, சத்தம் போட்டு அக்கம் பக்கத்தின் உதவியை நாடி உள்ளார்.

அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அக்கம் பக்கத்தினர் அதற்குள் ஓடிவந்து, அவனைப் பிடித்து தர்ம கொடுத்து அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.

விசாரணையில், “அந்த காமுகன், கடந்த 4 ஆண்டுகளில் 10 வயது முதல் 80 வயது மூதாட்டி வரை கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம்” செய்தது தெரியவந்தது.

40 Women from 10-80 years molested in 4 years

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்நாட்டு பெண்கள் “We are tired” என்ற, #டேகை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், நைஜீரியா நாட்டில் சமீப காலமாகவே, பெண்களுக்கு எதிரான அநீதிகள் அதிக அளவில் நடப்பதும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து, பெண்கள் அதிக அளவில் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வரும் நிலையில், 10 வயது சிறுமி உட்பட 40 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தவனைத் தூக்கில் போடவேண்டும் என்று அந்நாட்டுப் பெண்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.