8 ஆம் வகுப்பு மாணவியை 8 மாதங்களாக 3 வக்கிர புத்திகொண்ட முதியவர்கள் மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்து உள்ள வட மதுரை பகுதியைச் சேர்ந்த ஆர். கல்லுபட்டியைச் சேர்ந்த 37 வயதான தங்கவேல், கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இப்படியான நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி, பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், தற்போது கொரோனா காரணமாக பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வீட்டில் இருந்து வந்தார். சிறுமியின் பெற்றோர் பகல் நேரங்களில் வேலைக்கு சென்ற நிலையில், அந்த சிறுமி மட்டும் தனது வீட்டில் தனியாக இருந்து வந்து உள்ளார்.

இப்படியாக, சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த 37 வயதான தங்கவேல், சிறுமிக்கு பல தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து, நைசாக பேசி தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உள்ளார். இதனையடுத்து, சிறுமி தனது வீட்டிற்கு வந்ததும், சிறுமி மீது சபலப்பட்ட அவர், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமி, அதனை எதிர்த்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, இந்த சம்பவத்தை சொல்லி சொல்லியே மிரட்டிய அந்த நபர், அந்த சிறுமியிடம் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பழகி வந்து உள்ளார். ஒரு கட்டத்தில், அந்த சிறுமியை மிரட்டத் தொடங்கிய தங்கவேலு, அந்த சிறுமியை மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாகத் தெரிகிறது.

இப்படியாக, தங்கவேலுவுடன் அந்த சிறுமி அடிக்கடி சென்று வருவதை கவனித்த அப்பகுதியைச் சேர்ந்த 65 வயது முதியவரான பெருமாள் மற்றும் 70 வயதான குருநாதன் ஆகிய இரு முதியவர்களும், தங்கவேலுவை அணுகி, “நாங்களும் அந்த மாணவியை அனுபவிக்க வேண்டும் என்றும், எங்களுக்கும் அந்த சிறுமி மீது ஆசை இருக்கிறது என்றும், கூறி, தங்வேலுவை மிரட்டத் தொடங்கி உள்ளனர்.

அத்துடன், “எங்களது ஆசைகளை நிறைவேற்றவில்லை என்றால், தங்கவேலு உடன் உள்ள கள்ள உறவு குறித்து வெளியே சொல்லி விடுவோம்” என்று, சொல்லி சம்மந்தப்பட்ட சிறுமியை அவர்கள் மிரட்டி உள்ளனர். 

இதனால், இன்னும் பயந்துபோன அந்த சிறுமியை, அந்த இரு முதியவர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். இப்படியாக, அந்த சிறுமியை கடந்த 8 மாதங்களாக இந்த 3 பேரும் சேர்ந்து, சிறுமியை மிரட்டியே மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இப்படியாக, அடிக்கடி அந்த சிறுமி தங்கவேலு உடன் செல்வதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிலர், சந்தேகம் அடைந்து மாணவியின் பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார்கள். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், தங்களது மகளிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, “தனக்கு கடந்த 8 மாதங்களாக இந்த 3 பேரால், நடக்கும் கொடூர பாலியல் பலாத்காரங்கள் குறித்து கூறி” கண்ணீர் விட்டு அழுது உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், “இதனை ஏன் இத்தனை நாட்களாக எங்களிடம் கூறவில்லை” என்று கேட்டு இருக்கிறார்கள். அதற்கு பதில் அளித்த சிறுமி, “இதனை வெளியே சொன்னால் என்னை கொன்று விடுவேன் என்று, தங்கவேலுவும், அந்த இரு முதியவர்களும் என்னை மிரட்டினார்கள்” என்றும், அந்த சிறுமி கூறி அழுதிருக்கிறார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இது குறித்து வட மதுரையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இது தொடர்பாக வட மதுரை அனைத்து மகளிர் காவல் துறை ஆய்வாளர் தென்றல், “தங்கவேலு, பெருமாள், குருநாதன் ஆகிய 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் அதிரடியாக கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

அப்போது, “சிறுமிக்குத் தின்பண்டம் வாங்கி கொடுத்தும், மிரட்டியும் கடந்த 8 மாதங்களாக அந்த மாணவியிடம் அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, அவர்கள் 3 பேரையும் சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி பொது மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.