வேளாண் துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. அந்த சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது.

நரேந்திர சிங் தோமர்

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த வேளாண் துறையில், புதிதாக 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் பஞ்சாப், ஹரியானா, உத்திரபிரதேசம் விவசாயிகள் டெல்லி எல்லைப்பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நட்த்தினர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம், ஓராண்டுக்கும் மேலாகியும் தொடர்ந்து வருகிறது. இந்த போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர்.

மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களில்  பாதகமான அம்சங்கள் இருப்பதாக கூறி டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.  தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள், விவசாய சங்கங்கள் கடந்த ஓராண்டிற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,  இந்த மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிகடந்த 19-ம் தேதி அன்று காலை 9 மணிக்கு குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு  உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

வேளாண் சட்டங்களின் நலனை ஒரு தரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரிய வைக்க முடியவில்லை.  எனவே, மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இந்த மாதம் தொடங்கும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதற்கான நடைமுறையை தொடங்குவோம். விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்துவதற்காக கூடியுள்ள விவசாயிகள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

lok shaba

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. டிசம்பர் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடக்கின்றன. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார். பின்னர் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. இன்று குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, மக்களவையில் வேளாண் சட்டங்கள் ரத்து மசோதாவை நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.