இஸ்ரேல் நாட்டில், ஓடும் காரில் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த 2 ஐ.நா. அதிகாரிகளுக்கு ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டில், ஐக்கிய நாடுகளின் சபைக்கு பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு அலுவலக பணிகளுக்காக அரசு சார்பில் கார் ஒன்று 

கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த வாகனம், அந்நாட்டில் பரபரப்பாக இயங்கக்கூடிய ஒரு முக்கியமான சாலையில், மாலை நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தது. 

அந்த வாகனத்தில் ஒரு அதிகாரி பின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது மடியில் ஒரு அழகான இளம் பெண் ஒருவர், சிகப்பு நிற ஆடை அணிந்தபடி, அந்த அதிகாரியின் மடியில் அமர்ந்து, அந்த அதிகாரியுடன் உல்லாச இன்பத்தில் ஈடுபடுகிறார். 

அந்த நேரம் பார்த்து, அந்த கார் அங்குள்ள ஒரு சிக்னல் ஒன்றில் நிற்கிறது. சுமார் ஒரு நிமிடங்களுக்கு மேல் அந்த கார், அந்த சிக்னலில் நிற்கிறது. அந்த காரின் இரு புறமும் மற்ற வாகனங்கள் அங்கு வந்து நிற்கின்றன. ஆனால், இதைப் பற்றிய எல்லாம் துளிகூட கவலைப்படாத அந்த ஐ.நா. அரசு அதிகாரி, அந்த இளம் பெண்ணுடன் உல்லாச இன்பத்தில் ஈடுபடுகிறார். 

பின்னர், சிக்னல் போட்டதும், அந்த கார் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது. அப்போதும் கூட, அந்த ஜோடி உல்லாச இன்பத்தில் ஈடுபட்ட படியே அந்த காரில் பயணம் செய்கின்றனர். 

இந்த காட்சிகள் அனைத்தும், அந்த சிக்னல் அருகே இருந்த சிசிடிவி கேமராவில் அப்பட்டமாகப் பதிவாகியது. இதனையடுத்து, ஐ.நா அதிகாரி காரில் இளம் பெண்ணுடன் உல்லாச இன்பத்தில் ஈடுபடும் அந்த சிசிடிவி காட்சிகள், இணையத்தில் வெளியாகி பெரும் வைரலானது. இதனால், சம்மந்தப்பட்ட அந்த ஐ.நா. அதிகருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தது. 

இதனை அடுத்து, இந்த உல்லாச விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்த ஐ.நா. சபை உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாக பேசிய ஐ.நா. சபையின் செய்தி தொடர்பாளர், டுஜாரிக், “இது போன்ற செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது” என்று, கூறினார்.

மேலும், “ நாம் எதற்காக பணியாற்றுகிறோமோ, எதற்காகக் குரல் கொடுக்கிறோமோ, அதற்கு எதிரான குற்றம் இது” என்றும், அவர் வன்மையாகக் கண்டித்தார்.

“இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வெளியாகி உள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும், தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். 

அத்துடன், “இது தனிப்பட்ட விசயம் என்றால், அதை அவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், பொது இடத்தில் அதுவும், ஐ.நா. சபை பணிக்காகக் கொடுக்கப்பட்ட காரில் இப்படி ஒரு செயல்பாட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாது” என்றும், பல்வேறு தரப்பினரும் வன்மையாகத் தனது கண்டன குரல்களைத் தொடர்ந்து பதிவு செய்து வந்தனர்.

அத்துடன், ஐ.நா சபை அலுவலக பணிக்காகக் கொடுத்த காரில், அதிகாரி ஒருவர் அதைத் தவறாகப் பயன்படுத்தும் விதமாக, இளம் பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், அந்த சம்பவத்தில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அதன் படி, ஐ.நா. வின் அலுவலகப் பணிகளுக்காக இயங்கி வரும் காரில், ஐ.நா ஊழியர் ஒருவர் இளம் பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபட்ட போது, அதே காரில் மற்றொரு அதிகாரி ஒருவரும் இருந்ததாகத் தெரிய வந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடை ஐ.நா. உயர் அதிகாரிகள் குழு, சம்மந்தப்பட்ட இருவரையும் ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பில் அனுப்பி நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், அவர்கள் இருவரும் இது வரை பார்த்து வந்த ஐ.நா. பணிகள் அனைத்தும் பிற அதிகாரிகளுடன் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, “இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முழுமையாக முடியும் வரை, அந்த அதிகாரிகள் இருவரும் கண்டிப்பாக பணிக்கு வர மாட்டார்கள்” என்றும், ஐ.நா. தெரிவித்துள்ளது. 

இதனிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும், ஐ.நா. ஊழியர்களுக்கு எதிராக சுமார் 175 பாலியல் புகார்கள் பதிவாகி இருப்பதாகப் புள்ளி விபரம் ஒன்று வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, உலகமே முடங்கிப் போய் இருந்தாலும், அதிகாரம் படைத்த சிலர் தங்களது அதிகாரத்தைத் தவறான விசங்களுக்கு மட்டுமே இதுபோன்று தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வருவது, பொது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.