ஆன்லைன் சாட்டிங் மூலம் பழக்கமாகி, 5 இளைஞர்களுடன் 2 பள்ளி மாணவிகள் தனியாக ரூம் எடுத்து லாட்ஜில் தங்கியிருந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை பல்லாவரம் அடுத்து உள்ள அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த இரு மாணவிகள் தங்களது பெற்றோருடன் வசித்து வருகின்றனர்.

இந்த இரு பள்ளி மாணவிகளும், அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்கள்.

இந்த இரு மாணவிகளும், டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எப்போதும் மூழ்கியே இருந்து உள்ளனர்.

இப்படியாக, அடிக்கடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு, இந்த இரு மாணவிகளும் சாட்டிங் செயலி மூலம், சிலரிடம் சாட்டிங் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில், அந்த இரு மாணவிகளுக்கு விருதாசலத்தைச் சேர்ந்த 22 வயதான சுரேன் என்கிற அப்பு, 20 வயதான வினித் ஆகியோர்களுடன் பழகி வந்தனர்.

அதே நேரத்தில், இந்த இரு மாணவிகளும் சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான சஞ்சய், குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் எர்ணாவூரை சேர்ந்த 18 வயதான லெனின் ஜெரால்ட் அகிய 5 இளைஞர்களுடன் ஒரே நேரத்தில் பழகி வந்து உள்ளனர். 

அத்துடன், இந்த 5 மணவர்களும் படிப்புக்காகவும், வேலைக்காகவும் வீட்டைவிட்டு பிரிந்து  சென்னையில் தனியாக ரூம் எடுத்து தங்கி இருந்து வருகின்றனர்.

இந்த சூழலில் தான், வீட்டில் இருந்து வந்த அந்த 11 ஆம் வகுப்பு மாணவிகள் இருவரும் திடீரென்று, தனது வீட்டில் இருந்து மாயமாகி உள்ளனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மாணவிள் இருவரும் பயன்படுத்தி வந்த செல்போன் சிக்னலை வைத்து தேடி உள்ளனர்.

அப்போது, வீட்டில் இருந்து மாயமான இரு அரசுப் பள்ளி மாணவிகளும், சென்னை சென்ட்ரலில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அங்கு விரைந்து சென்ற போலீசார், இரு அரசுப் பள்ளி மாணவிகளும், அந்த தனியார் லாட்ஜில் 5 இளைஞர்களுடன் ஒன்றாக தங்கி இருந்தது தெரிய வந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இரு மாணவிகளையும் அவர்களிடம் இருந்து மீட்ட நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். 

போலீசார் மேற்கொண்ட இந்த விசாரணையில், “இந்த 5 இளைஞர்களும், அந்த இரு மாணவிகளை விருந்துக்கு அழைத்ததாகவும், இரவு விருந்து முடிய நீண்ட நேரம் ஆனதால், லாட்ஜில் தங்கியதாகவும்” கூறி உள்ளனர்.

இதனையடுத்து, அந்த லாட்ஜில் தங்கி இருந்த 5 இளைஞர்களையுமு் போலீசார் அதிரடியாக கைது செய்து, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மேலும், “சம்மந்தப்பட்ட இரு மாணவிகளிடமும், அந்த 5 இளைஞர்களும் உடல் ரீதியாக பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டார்களா?” என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.