வீட்டு வேலை செய்ய வைத்து 17 வயது சிறுமியை காப்பக உரிமையாளர் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 60 வயதான சார்லஸ் சிங், அப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாகக் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்துள்ளார். அப்போது, தாய், தந்தையை இழந்த 13 வயது சிறுமியை அவரது உறவினர் ஒருவர், இந்த காப்பகத்தில் சேர்த்துள்ளார். 

17 yo girl sexually assaulted by archive owner

சிறுமியிடம் எதையோ பார்த்து காம வயப்பட்ட அந்த காப்பாக உரிமையாளர், அந்த சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் காப்பகம் நடத்துவதற்கு போதுமான நிதி கிடைக்காத நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள், மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு, காப்பகத்தை மூடியுள்ளார்.

ஆனால், பாலியல் பலாத்காரம் செய்த சிறுமியை மட்டும் தனது வீட்டிலேயே வேலைக்கு அமர்த்தியுள்ளார். வீட்டு வேலைக்குச் சேர்த்த பிறகும் தொடர்ந்து, 4 ஆண்டுகளாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

தற்போது சிறுமிக்கு 17 வயது ஆகும் நிலையில், பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்த சிறுமி, பாலியல் பலாத்காரத்தின் வலியைத் தாங்க முடியாமல் தவித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தன்னை பார்க்க வந்த தனது உறவினர் ஒருவரிடம் இது குறித்து புகார் செய்து அழுதுள்ளார்.

17 yo girl sexually assaulted by archive owner

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அந்த மாவட்டத்தின் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன், கோவை சூலூர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். 

இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார், விசாரணை நடத்தியதில் சிறுமி கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர்.

மேலும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையிலடைத்தனர். அத்துடன், இவர் காப்பகம் வைத்து நடத்தும்போது, “அங்கிருந்த சிறுமிகளிடம் இதேபோன்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டாரா?” என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.