ஆசை வார்த்தைகளால் மயக்கி 17 வயது சிறுமி, 23 வயது இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, அதே பகுதியில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தனது அக்கா பிரபாவதி வீட்டிற்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார்.

17 yo girl cheated by 23 yo buy love affair

அப்போது, பாபநாசத்தைச் சேர்ந்த 23 வயதான பிரகாஷ், அப்பகுதியில் கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, பிரகாஷ் வேலை நிமித்தமாக அடிக்கடி பிரபாவதி வீட்டிற்குச் சென்று வந்துள்ளார். 

அப்போது, அந்த சிறுமிக்கும் பிரகாஷ்க்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தைப் பயன்படுத்திக்கொண்ட பிரகாஷ், அந்த சிறுமியை ஆசை ஆசையான வார்த்தைகள் கூறி, ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு, வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்ட பிரகாஷ், அந்த சிறுமியை ஆசை தீர தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதனிடையே, தனது மகளை காணவில்லை என்று, சிறுமியின் பெற்றோர் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

17 yo girl cheated by 23 yo buy love affair

இந்நிலையில், திருவலஞ்சுழி ஆர்ச் அருகே மாயமான சிறுமியுடன் பிரகாஷ் நின்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த போலீசார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். இதில், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.