அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒரே நாளில் 1,480 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ், சீனாவைக் காட்டிலும் பல உலக வல்லரசு நாடுகளை ஆட்டி படைத்து வருகிறது.

1480 kills in US in one day for Corona

குறிப்பாக, வல்லரசு நாடான அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், சீனாவை விட அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசுக்கு அதிகபட்சமாக 1,480 பேர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய பிறகு, அமெரிக்காவில் ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச உயிரிழப்பு இது என்பதால், அந்நாட்டு மக்கள் கடும் பீதியில் உரைந்துள்ளனர். 

அமெரிக்காவில் இது வரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,406 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 277,161 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.