ஜோசியர் பேச்சைக் கேட்டு 14 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவர் 3 மாத கர்ப்பம் அடைந்துள்ளதால், குடும்பமே தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சிவகங்கை மாவட்டம் ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த மாணிக்கம், தனது 27 வயது மகன் ரத்னேஷ்வரனுக்கும், இவரது தாய் மாமன் மகளான 14 வயது சிறுமிக்கும் தனது குடும்ப ஜோசியர் ஒருவரிடம் ஜாதகம் பார்த்துள்ளார்.

14 year old girl married based on astrology! 3 months pregnant

அப்போர், “ சிறுமிக்கு 14 வயசில் திருமணம் செய்தால், வாழ்க்கை சிறப்பா இருக்கும்” என்று குடும்ப ஜோசியர் கூறியிருக்கிறார். அத்துடன், 27 வயது ரத்னேஷ்வரனுக்கும் - 14 வயது சிறுமிக்கும் திருமணம் செய்வது தொடர்பாக, நாள் குறித்து கொடுத்துள்ளார். இதற்கு, சிறுமியின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தற்போது ஊரடங்கு காலம் என்பதால், முக்கியமான உறவினர்களுக்கு மட்டும் சொல்லிவிட்டு, அவர்கள் வீட்டில் வைத்தே கடந்த ஏப்ரல் மாதம் ரகசியமாகத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, திருமணம் நடைபெற்று இது 3 வது மாதம் என்பதால், அந்த சிறுமிக்கு தாலி பெருக்கு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அப்போதுதான், அக்கம் பக்கத்தினர் அனைவருக்கும் சிறுமிக்கு திருமணம் ஆன விசயம் தெரியவந்தது.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் சிலர் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பில் ரகசியமாகப் புகார் செய்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், சிறுமி என தெரிந்தும் திருமணம் செய்து கொண்ட மாப்பிள்ளை ரத்னேஷ்வரனை, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

14 year old girl married based on astrology! 3 months pregnant

மேலும், சிறுமிக்கு திருமணம் நடத்தி வைத்த குற்றத்திற்காக மணமக்களின் பெற்றோர்களையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, சிறுமி தற்போது 3 மாதம் கர்ப்பமாக இருப்பதும் அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.