சமயபுரம் அருகே காதலனை நம்பிச் சென்ற 10 ஆம் வகுப்பு சிறுமியை, காதலன் உட்பட 3 பேர் சேர்ந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில்,  சிறுமி தற்போது கர்ப்பமாகி உள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்துள்ள ஈச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான கோவிந்தராஜ் என்பவரின் 16 வயது மகள் அமுதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்ப படித்து வருகிறார்.

அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் மருதுபாண்டி என்ற இளைஞர், அமுதாவை காதலித்து உள்ளார். ஒரு கட்டத்தில், தன் காதலை அந்த சிறுமியிடம் கூறி உள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியும் காதலை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இதையடுத்து இருவரும் காதலிக்கத் தொடங்கினர். தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால், சிறுமி தன் வீட்டில் இருந்து வந்துள்ளார். 

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திய காதலன் மருதுபாண்டி திருமண ஆசை காட்டி, சிறுமியை பார்க்க வேண்டும் என்று தனியாக அழைத்ததாக தெரிகிறது.

காதலன் மருதுபாண்டியை நம்பி அந்த சிறுமியும் தனியாக வந்துள்ளார். அப்போது, காதலன் மருதுபாண்டி திருமண ஆசை காட்டி, அந்த சிறுமியுடன் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளான். அந்த நேரம் அங்கு வந்த காதலன் மருதுபாண்டியனின் நண்பர்கள் தினேஷ் மற்றும் விமல் குமார் ஆகிய இருவரும் வந்த நிலையில், அவர்கள் சேர்ந்து அந்த சிறுமியை சேர்ந்து மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக வெளியே சொன்னால், கொலை செய்து விடுவோம் என்றும், அவர்கள் அந்த சிறுமியை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

இதனால், பயந்துபோன சிறுமி அங்கிருந்து விடுபட்டு வீட்டிற்கு வந்த பிறகும், தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமி கடந்த சில நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்துள்ளார். இதனால், சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனைக்கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் இது குறித்து விசாரித்து உள்ளனர்.

இதனால், வேறு வழியில்லாமல் சிறுமியும் தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்துக் கூறி அழுதுள்ளார். இதனால், இன்னம் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியின் காதலன் மருதூரைச் சேர்ந்த 21 வயதான மருதுபாண்டியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அத்துடன், தலைமறைவாக உள்ள மருதுபாண்டியனின் நண்பர்களான அல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயதான விமல் குமார் மற்றும் லால்குடியைச் சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பு ஏற்பட்டது.