17 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்து உள்ள அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்ற இளைஞர், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியான நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்துள்ளார். அந்த மாணவி பள்ளி மாணவி, நாள் தோறும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது, அந்த பள்ளி மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய ராஜேஷ் கண்ணன், அந்த பள்ளி மாணவியின் ஃபாலோ செய்து. தொடர்ந்து பின் தொடர்ந்து வந்துள்ளார்.

அத்துடன், அந்த மாணவிக்கு அவர் திருமண ஆசையும் காட்டி வந்ததாகத் தெரிகிறது. ஒரு பக்கம் காதல் ஆசை, மறுபக்கம் திருமண ஆசை என்று, அந்த 17 வயது மாணவிக்கு தொடர்ச்சியாக அவர் காதல் என்ற பெயரில் பின் தொடர்ந்து வந்த நிலையில், திடீரென்று அந்த மாணவியைக் கடத்திச் சென்று ராஜேஷ்கண்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அங்குள்ள உத்தமபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

அத்துடன், இது தொடர்பான வழக்கு அங்குள்ள தேனி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில், தற்போது அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்குத் தேனி மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. 

அத்துடன், குற்றவாளிக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததோடு, சிறுமியை கடத்திய குற்றத்திற்காக மேலும் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அளித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

மேலும், தண்டனை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்றும், தேனி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, குற்றவாளியான ராஜேஷ்கண்ணனை, காவல் துறையினர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.