இணையத்தில் பி.சி.ஓ.எஸ் பற்றிய பல தவறான தகவல்கள் கொட்டி கிடக்கிறது. அவை பி.சி.எஸ்.ஓ பற்றின குழப்பத்தையும், பயத்தையும் உருவாக்கியுள்ளது. பல எதிர்மறையான எண்ணங்களுக்கும் இது வழிவகுக்கின்றன. பாலிசிஸ்டிக் ஓவரி குறித்து மக்களால் நம்பப்படும் கட்டுக்கதைகளும், அதன் அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சை முறைகளை பற்றி விரிவாக பேசுகிறார் திருச்சியை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் அனிதா.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்ன?கருப்பை நீர்க்கட்டிகள் (PCOS) கட்டுகதைகளும் , மருத்துவ தீர்வுகளும் ( A- Z)

கர்ப்பப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சின்னதாக நீர்க்கட்டிகள் உருவாக ஆரம்பிக்கும். இந்த நிலையில், சினைப்பையின் சுவர்கள் தடிமனாகி விடுவதாலும் நீர்க்கட்டிகளின் பெருக்கத்தாலும், கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படுகிறது. தண்ணீரால் நிரப்பப்பட்ட சிறு பைகளை போன்ற கட்டிகள் கருப்பையில் வட்ட வட்டமாக நெக்லஸ் போல இருக்கும். இந்த பைகள் மாதிரி பல கட்டிகள் (cyst) இருக்கும். இப்படிப் பல திரவக் கட்டிகள் இருப்பதையே Poly Cystic Ovary Syndrome என்கிறோம்.

என்ன காரணங்களால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது ?pcos

ஹார்மோன் சமச்சீரின்மை, மாசுபட்ட காற்றை சுவாசிப்பது, தவறான வாழ்க்கைமுறை, மரபணு பிரச்னை என்று சினைப்பை நீர்க்கட்டி வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. சில பெண்களுக்கு முதல் குழந்தை பிறந்த பிறகும் இந்த கட்டிகள் உருவாக தொடங்கும். பெரும்பாலும் தற்போது டீன் ஏஜ் பருவத்தில்தான் இந்தப் பிரச்னை அதிகமாக வருகிறது.

அறிகுறிகள் என்னென்ன?

ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஆண் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கப்படும் என்பதால் எடை அதிகரிப்பு , ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, முகப்பரு, அதிகமாக முடி உதிர்தல், முகங்களில் முடி வளர்வது போன்ற பிரச்சினைகள் உள்ளிட்ட பல அறிகுறிகளை ஏற்படுத்தும்.

இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு இருந்தாலும் உடனடியாக மகப்பேறு மருத்துவரை அனுவது அவசியம். பிசிஓஎஸ் ஒரு சிலருக்கு நீரிழிவு வரை பாதிப்பு ஏற்படுத்துவதால் ஆரம்பத்திலேயே மருத்துவரைச் சந்தித்துவிட்டால் ஆறு மாதங்களில் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்.

 

pcosஇந்த பிரச்சனையால் ஏற்படும் மன அழுத்தம் ?

பிசிஓஎஸ் வந்த உட்ன உடல் எடை அதிகரிக்க தொடங்கும். இதனால் உடல் அழகு முற்றிலும் மாறும். இது முதல் மனஅழுத்தம். பின் அதிகமாக முடி கொட்டும். குறிப்பாக, தலை உச்சியில் அதிகமாகக் கொட்டும். இதனால் சிலருக்கு வழுக்கை விழுந்ததுபோல் தெரியும். சிலருக்கு மெலிதாக மீசை, தாடி எல்லாம் வளர ஆரம்பிக்கும். முடியின் அடர்த்தி வெகுவாக குறைந்து ஸ்கால்ப் தெரிய ஆரம்பிக்கும்.இதனால் பெண்கள் தன்னம்பிக்கை குறைந்து, மன அழுத்ததிற்கு சென்று விடுகிறார்கள்.

இந்த பிரச்சனை இருந்தால் குழந்தை பிறக்காதா?

பிசிஓஎஸ் பிரச்னை இருப்பவர்களுக்கு மாதவிடாய் ஒழுங்கின்மையும் இருக்கும் அதனால் தான் குழந்தை கருதரிப்பதில் சிக்கல்கள் வரும். ஆனால் பிறக்காது என்று எல்லாம் கிடையாது. திருமாணத்துக்கு முன்பு இந்த பிரச்சனை இருக்கிறது என்று சிகிச்சையை சரியாக எடுத்துக்கொண்டுதிருமணம் செய்துகொள்வது நல்லது.

ஒருவேளை திருமணத்துக்கு பிறகு மீண்டும் பிசிஓஎஸ் பிரச்சனை வந்தால் மறுபடியும் சிகிச்சையெடுத்து கட்டுக்குள் கொண்டு வந்த பிறகுதான், திருமணம், குழந்தைப்பேறு என்று யோசிப்பது நல்லது. சிலருக்கு முதல் குழந்தை பிறந்த பிறகு கூட இந்த பிரச்சனை வரும். மீண்டும் சிகிச்சை எடுத்து கட்டுப்படுத்திவிடு இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

அதனால் பிசிஓஎஸ் பிரச்சனை இருந்தால் , அவர்களுக்கு குழந்தை பிறக்காது என்ற செய்தி முற்றிலும் பொய்யானது.

செய்ய வேண்டியது என்ன?

பிசிஓஎஸ் ஆரம்ப நிலையில் இருக்கிறது என்றால் மாவுச்சத்து மற்றும் கொழுப்புச் சத்தை முடிந்த அளவு குறைத்துவிட்டு, காய்கறிகள், கீரைகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆரம்ப நிலையை கடந்துவிட்டது என்றால் உடல் பருமனுக்கு ஏற்ற டயட் முறையை உங்களது மருத்துவரிடம் கேட்டு பின்பற்றலாம். வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை மற்றும் பீட்சா, பர்கர் போன்ற ஜங்க் உணவுகளை அறவே தவிர்த்துவிடுங்கள்.

சிகிச்சையோடு உடற்பயிற்சியும் சேரும்போது பாதிப்புகளிலிருந்து சீக்கிரம் வெளியே வர முடியும். அதனால் உடற்பயிற்சி ரொம்பவே அவசியம்.

பிசிஓஎஸ் ஏற்படும் மன அழுத்ததிற்கு தனியாக சகிச்சை எடுக்க வேண்டும்?

இது ஒவ்வொரு தனிநபரை பொருத்து மாறுப்படும். சிகிச்சையை முறையாக கடைபிடித்து உடல் எடையை குறைந்தாலே ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ள தொடங்கினாலே போது உடல், தலைமுடி மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பிக்கும். ஒருவேளை சிகிச்சையை சரியாக பாலோ செய்யவில்லை என்றால் உடல் எடையும் குறையாது தலைமுடி கொட்டுவதும் நிற்காது. எல்லாவற்றிக்கும் மேல் இதுப்போன்ற நேரங்களில் இயல்பாகவே மன அழுத்தம் இருக்கவே செய்யும். ஆனால் இதற்காக தனியாக சிகிச்சைக்கு போக அவசியம் இல்லை.

பிசிஓஎஸ் சிகிச்சையையின் போது அவரவர் மருத்துவர் சொல்லும்படி., சரியாக பின்பற்றுவது அவசியம். அதனால் பிரச்சனையில் இருந்து சீக்கிரம் மீள்வது பாதிக்கப்பட்டவர்களின் கையில் தான் இருக்கிறது..