பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சோனம் கபூர். நடிகர் துல்கர் சல்மானுடன் சேர்ந்து அசத்தும் படம் தான் இந்த ஸோயா ஃபாக்டர். அபிஷேக் ஷர்மா இயக்கத்தில் உருவான இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. 

sonamkapoor

dulquersalman

ஜீ இசை நிறுவனம் இசை பணிகளை மேற்கொள்கிறது. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், துல்கர் சல்மான் கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ஈர்த்து வருகிறது. லக்கி சார்ம் பாடலை தொடர்ந்து தற்போது காஷ் பாடல் வீடியோ வெளியானது. அர்ஜித் சிங் மற்றும் அலிசா பாடிய இந்த பாடல் வரிகளை அமிதா பட்டாச்சார்யா எழுதியுள்ளார்.

zoyafactor

zoyafactor

நடிகர் துல்கர் கைவசம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், வான் போன்ற படங்கள் உள்ளது. இறுதியாக மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

zoyafactor

zoyafactor