தற்போது இருக்கும் சினிமா ட்ரெண்டில் வெப் சீரிஸுக்கு என தனி ரசிகர்கள் உண்டு. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார். 

Zee5 Statement Regarding Godman Webseries

இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கினார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். வடசென்னை, பிகில் போன்ற படங்களில் நடித்த டேனியல் பாலாஜி, இந்த வெப் சீரிஸில் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Zee5 Statement Regarding Godman Webseries

இந்த வெப் சீரிஸ் ஜூன் மாதம் 12-ம் தேதி Zee5 தளத்தில் வெளியாகவிருந்தது. சமீபத்தில் இதன் டீஸர் வெளியாகியது. அதில் இடம் பெற்றுள்ள ஆபாச காட்சிகளும், வசனங்களும் சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சைகளை கிளம்பியது. இதனால் டீஸர் நீக்கப்பட்டுள்ளது. 

Zee5 Statement Regarding Godman Webseries

இதனையடுத்து ஜீ5 தளம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஜி5 தளம் வழிமுறைகளை முறையாக கடைபிடித்துவருகிறது. கருத்துக்களை அடிப்படையாக கொண்டு, காட்மேன் வெப் சீரிஸின் ரீலிஸை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.  இந்த வெப் சீரிஸின் தயாரிப்பாளர், இந்த வெப் சீரிஸ் மற்றும் ஜீ5 ஆகியவை எந்தவொரு மதத்திற்கும், சமூகத்திற்கும், நம்பிக்கைக்கும் எதிரானது அல்ல என்று விளக்கமளித்துள்ளது.