ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பூவே பூச்சூடவா.டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் வெற்றி பெற்று பூவே பூச்சூடவா தொடரின் ஹீரோயினாக உருவெடுத்வர் ரேஷ்மா.சீரியலிலும் தனது நடிப்பால் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.கார்த்திக் வாசுதேவன் இந்த தொடரின் நாயகனாக நடித்து வருகிறார்.

மதன் பாண்டியன்,க்ரித்திகா லட்டு,மீனா குமாரி,உமா பத்மநாபன்,யுவராணி,தனலட்சுமி,ரவீனா,திவாகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை பெற்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் அள்ளி வருகிறது.இந்த தொடருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.

இந்த தொடர் கொரோனாவை தொடர்ந்து ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் மதன் பாண்டியனை காதலிப்பதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தொடரின் நாயகி ரேஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தாண்டு அன்று தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.1000 எபிசோடுகளை ஜீ தமிழின் வெற்றிகரமான சில தொடர்களின் வரிசையில் இணைந்து அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது இந்த தொடர்.இதற்காக ரசிகர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.