கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று மானாட மயிலாட.இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் புவி அரசு.இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.இந்த தொடரின் மூலம் சீரியலிலும் என்ட்ரி கொடுத்தார் புவி அரசு.

அடுத்ததாக EMI,விண்ணைத்தாண்டி வருவாயா,வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்க்க தொடங்கினார் புவி.அடுத்தாக ஜீ தமிழில் ஒளிபரப்பான லட்சுமி வாந்தாச்சு தொடரில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் புவி.தொடர்ந்து ஜீ தமிழில் வரும் சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது நடன திறமையையும் வெளிப்படுத்தினார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் தொடரில் ஹீரோ அந்தஸ்தை பெற்றார் புவி அரசு.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது..இதனை தொடர்ந்து ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடரான ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார் புவி.அஸ்வினி இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஸ்வாதி,அழகப்பன்,விஷ்ணுகாந்த் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.தற்போது இந்த தொடர் ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 900 எபிசோடுகளை கடந்து ஜீ தமிழின் வெற்றிகரமான தொடர்கள் லிஸ்டில் இணைந்துள்ளது.