தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா.கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டு தன்னுடைய இசை ராஜாங்கத்தால் பலரையும் ஆட்டிவைத்து வருகிறார் யுவன்.இவருக்கென்று ஒரு மாஸ் ஹீரோவுக்கு நிகரான வரவேற்பு சினிமா ரசிகர்களிடம் உள்ளது.குறிப்பாக யுவன் 90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் நெருக்கமான ஒரு இசையமைப்பாளராக மாறிவிட்டார் யுவன் ஷங்கர் ராஜா.

பல படங்களுக்கு யுவனின் இசையே அடையாளமாக இருந்துள்ளன.இவரது இசையில் கடைசியாக தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் சிவகார்த்திகேயனின் ஹீரோ படங்கள் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை,STR-ன் மாநாடு,டிக்கிலோனா,விஷாலின் சக்ரா உள்ளிட்ட சில முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தல அஜித்துடன் யுவன் பல படங்களில் இணைந்து வேலைபார்த்துள்ளார்.அனைத்து படங்களிலும் பாடல்களும்,பின்னணி இசையும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து தல அஜித்துடன் யுவன் தற்போது வலிமை படத்தில் பணியாற்றி வருகிறார்.லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் வேலைகள் தடைபட்டுள்ளது.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.

யுவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.அதில் வலிமை படத்தின் பின்னணி இசை பயங்கரமாக இருக்கும் இந்த லாக்டவுன் காரணாமாக வேலைகள் தடைபட்டுள்ளது என்று தெரிவித்தார்.அஜித் குறித்து நம்ம தல என்று யுவன் பதிலளித்தார்.தளபதி விஜயுடன் எப்போது மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளீர்கள் என்று ரசிகர் கேட்க நான் எப்போதும் ரெடி தான் வாய்ப்பு வந்தால் செய்து விடலாம் என்று தெரிவித்தார்.மேலும் விஜய் தனக்கு பல நேரங்களில் ஊக்கமளித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ள.விஜயும் யுவனும் புதிய கீதை படத்தில் மட்டுமே வேலைபார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.