இந்திய மைக்கல் ஜாக்சனாக திகழ்பவர் நடிகர் பிரபு தேவா. சமீபத்தில் இவரது நடிப்பில் தேவி 2 வெளியாகி சூப்பரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் யங் மங் சங். தற்போது இந்த படத்தின் டைட்டில் இன்ட்ரோ பாடல் வீடியோ வெளியானது.

prabhudeva

பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் தங்கர் பச்சான், ஆர்ஜே.பாலாஜி, சித்ராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

prabhudeva

பிரபுதேவா இந்த படத்தில் குங்ஃபூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்றுத்தரும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பிரபாகர் நடிக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகும் இந்த படத்தை எம்.எஸ்.அர்ஜுன் இயக்க கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் பிரபுதேவா பாடல் ஒன்றை எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.