தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. இவரது பெயர் பலகை இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம், பிகில் போன்ற படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்து அசத்தினார். கோமாளி திரைப்படத்தில் சீரான நடிப்பால் அனைத்து திரை விரும்பிகளையும் ஈர்த்தார். இந்த வருடமும் சூப்பர்ஸ்டாருடன் இணைந்து தர்பாரில் கலக்கினார். 

yogibabu

யோகிபாபு ஹீரோவாக நடித்து வரும் படங்களும் தொடர் வெற்றியைப் பெற்று வருகின்றன. இதனால் அவருக்கு படங்கள் குவிந்து வருகிறது என்றே கூறலாம். இந்நிலையில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் காக்டெய்ல் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

yogibabu

இயக்குனர் பிஜி முத்தையா தயாரிக்கும் இந்த படத்தை விஜய் முருகன் இயக்க உள்ளார். சாய் பாஸ்கர் இசையமைக்கும் இந்த படத்திற்கு நவீன் ஒளிப்பதிவும் பாசில் படத்தொகுப்பும் செய்யவுள்ளனர். முழுக்க முழுக்க நகைச்சுவை கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.