2010-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் டாப்ஸி. அதைத்தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான கேம்-ஓவர் திரைப்படம் டாப்ஸிக்கு பெரும் பெயரை சம்பாதித்து தந்தது. நடிகை டாப்ஸி அடுத்து தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு புதிய காமெடி படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் சென்ற வாரம் வெளிவந்திருந்தது.

இந்த படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்க உள்ளார் என கூறப்பட்டிருந்தது. இந்த படத்தின் ஷுட்டிங் என்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறது. தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் காமெடி நடிகர் யோகிபாபு ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக இந்த படத்தில் இணைந்து இருக்கிறார் என்பது தான். 

அவரது கதாப்பாத்திரம் படம் முழுவதும் பயணிக்கும் வகையில் தான் இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் படத்தில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு நடிக்க உள்ளார் எனவும் தகவல் வந்திருக்கிறது.

தீபக் சுந்தர்ராஜன் இதற்கு முன்பு இயக்குனர் விஜய்க்கு உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் டாப்ஸி street-smart woman ஆக நடிக்க உள்ளார். 

தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி அடுத்து தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ஜன கன மன என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை அஹ்மத் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. டி இமான் இசையமைத்து வரும் இந்த படத்தினை சுஜாதா விஜயகுமாரின் ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.