2018 இறுதியில் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் சாதனை படைத்த படம் KGF.யாஷ் ஹீரோவாக நடிக்க,
ஸ்ரீநிதி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.பிரசாந்த் நீல் இந்த படத்தை இயக்கி இருந்தார்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியிடப்பட்டது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது.இந்த படத்தின் ரிலீஸை ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது,இதற்கு காரணம் கே.ஜி.எப் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பே காரணம்.

இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றான அதிரா என்ற கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.ரவீனா டாண்டன்,ரமேஷ் ராவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள்ளனர்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போயுள்ளது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வரும் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.போஸ்ட்டரை வைத்து பார்க்கும்பொழுது,படத்தின் முக்கிய வில்லனாக நடிக்கும் சஞ்சய் தத்தின் ஆதீரா கேரக்டர் பர்ஸ்ட்லுக் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.