சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்கிறார். கனிகா, மோகன் ராஜா, ரித்விகா, விவேக், சின்னி ஜெயந்த் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்தப் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குனராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை பழனியில் துவங்கி வைத்தார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்து முடிந்தது. 

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மற்றும் சினிமா சார்ந்த தொழில்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளது. அரசு உத்தரவு படி சமூக இடைவெளியுடனும், பாதுகாப்புடனும் இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் மற்றும் டப்பிங் பணிகள் துவங்கியது. சமீபத்தில் நடிகை ரித்விகா தனது காட்சிகளுக்கான டப்பிங்கை முடித்தார். அவரை தொடர்ந்து நடிகை கனிகாவும் தனது டப்பிங்கை முடித்தார். இந்த படத்திற்காக இலங்கை தமிழ் கற்றுக்கொண்டுள்ளார் என்பது கூடுதல் தகவல். 

இந்நிலையில் படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை மேகா ஆகாஷுக்கு பியானோ வாசிக்க விஜய்சேதுபதி கற்றுத்தருவது போல் இருக்கும் இந்த புகைப்படத்தில் உள்ளது. இந்த அழகான புகைப்படத்தை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

மக்கள் விரும்பும் மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வில்லன் ரோல், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இந்த லாக்டவுனில் இயக்குனர் நலன் குமாரசாமியுடன் இணைந்து புது ஜானரில் ஒரு ஹேங்கவுட் படத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளார் அவரது ரசிகர்கள்.