ஜோக்கர் திரைப்பட பாணியில் பெண் ஒருவர் கழிவரை கட்டித் தர வலியுறுத்தி விபரீதமான முடிவு எடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் கிறிஸ்துராஜபுரம் பகுதியில் வசித்து வரும் சசிகுமார் - ஷாலினி தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்குத் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆனதாகவும் கூறப்படுகிறது.

suicide

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு வீட்டில் கழிவரை தட்டித்தர வேண்டும் என்று ஷாலினி, தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளாக சசிகுமாரை வலியுறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கழிவரை கட்டித் தர தாமதம் ஆவதால், மாமனார் - மாமியாரிடமும் அடிக்கடி ஷாலினி சண்டைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, இருவருக்கும் இடையே மீண்டும் இது தொடர்பாகப் பிரச்சனை எழுந்து வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், மனமுடைந்த போன ஷாலினி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக, கணவன் வீட்டார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

toilet

இதனால், அதிர்ச்சியடைந்த ஷாலினியின் பெற்றோர், ஷாலினியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, ஷாலினியின் தற்கொலை முடிவால், அவரது 3 குழந்தைகளும் பரிதவித்து வருகின்றனர்.