கணவன் - மனைவிக்குள் சண்டை வந்து ஒருவரை ஒருவர் அடித்துக்கொன்றால், அது வரதட்சணை கொடுமையாகவோ அல்லது கள்ளக் காதலாகத் தான் இதுவரை இருந்திருக்கிறது. ஆனால், அப்படிப்பட்ட கொலைகளுக்கு, இந்த டிஜிட்டல் உலகில் சமகால பெண்மணி ஒருவர், புதிய உருவகம் கொடுத்துள்ளது ஆண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

husband death

மகாராஷ்ரா மாநிலம் பால்கர் பகுதி, கலா நகரில் வசித்து வந்த பிரணாலி சுனில் கடம் என்ற 33 வயது பெண்ணிற்கு, ஏற்கனவே ஒரு பெண் குழந்தை ஒன்று உள்ளது. அவர் மீண்டும் கருவுற்று, அவருக்கு 2 வதும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

2 வதும் பெண் குழந்தை பிறந்ததில் கணவனுக்கு மகிழ்ச்சியே. ஆனால், குழந்தையின் தாய், “2 வதும் பெண் பிள்ளையை பெக்க வச்சுட்டியே ” என்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது முதல் கணவனிடம் அடிக்கடி சண்டைக்குப் போய் உள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் முற்றியதாகத் தெரிகிறது.

சம்பவத்தன்று, கடும் கோபத்திலிருந்த பிரணாலி, கணவனை வீட்டின் கிச்சனிலிருந்த கத்தியால்.. வெறித்தீர் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து தன் மீதும், தன் ஆடை மீதும் இருந்த ரத்த கரைகளை அகற்றிவிட்டு, வேறொரு ஆடையை மாற்றிக்கொண்டு, இந்த கொலையைத் தற்கொலையாக மாற்ற முயன்றுள்ளார்.

இதனையடுத்து, போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில், கணவன் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், “2 வதும் பெண் குழந்தை பிறந்ததால், ஆத்திரம் தாங்காமல், அதற்குக் காரணமான கணவனை வெறித்தீர் கத்தியால் குத்தி கொன்றதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

husband death

ஆண் - பெண் சமம் என்று மாறிக்கொண்டு இருக்கும் இந்த நவீன டிஜிட்டல் உலகில், பெண் குழந்தையைப் பெற்றெடுக்கக் காரணமான, கணவனையே கொலை செய்யும் சில ஆதிகால மனம் கொண்ட பெண்களும், சம காலத்தில் வசிக்கவே செய்கின்றனர்.

பெண் குழந்தைகளை வெறுக்கும் மனப்பாங்கு மாற வேண்டியது முதலில் ஆண்களிடத்தில் அல்ல. அது பெண்களிடத்திலிருந்து அந்த மாற்றம் தொடங்க வேண்டும். அது தான் உண்மையான மாற்றங்களை சமூகத்தில் விளைவிக்கச் செய்யும்.