மிரட்டலுக்குப் பயந்து வாட்ஸ்ஆப்பில் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் பயிற்சி முடித்துவிட்டு, அதே கல்லூரியில் இளம் ஒருவர் பணியாற்றி வருகிறார்.

Whatsapp video call woman

வீட்டிலிருந்து தினமும் பேருந்தில் அலுவலகம் செல்லும்போது, தன்னுடன் பணியாற்றும் ஆண் நண்பருடன் சேர்ந்து தான் பயணிப்பார். ஆனால், அவருடன் பேருந்தில் செல்லும்போது, அந்த இளம் பெண், நெருக்கமாக இருப்பதும், ரொமன்ஸ் செய்வதுமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி, பேருந்தில் அவர்கள் நெருக்கமாக நின்று ரொமன்ஸ் செய்வதை, அருகிலிருந்த வரதராஜன் என்பவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண்ணிடம் சென்று “இருவரும் பேசிக்கொண்டிருப்பதை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், நீ அவனுடன் ஊர் சுற்றுகிறாய் என்று, உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிடுவதாகவும்” கூறி வரதராஜன் என்பவர், அந்த பெண்ணிடம் செல்போன் நம்பரை வாங்கிச் சென்றுள்ளார். மேலும், தன்னுடன் ஆடை இல்லாமல் வாட்ஸ்ஆப்பில் வீடியோ காலில் பேச வேண்டும் என்றும் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனால், பயந்துபோன இளம் பெண், வீட்டிற்குச் சென்றதும், அவரிடம் வாட்ஸ்ஆப்பில் ஆடைகள் இன்றி, நிர்வாணமாகப் பேசியுள்ளார். ஆனால், எதிர்முனையில் பேசிய வரதராஜன், அதையும் அந்த பெண்ணிற்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளான். பின்பு, அந்த நிர்வாண வீடியோவை வைத்து, தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று, அந்த இளம் பெண்ணை அவன் வற்புறுத்தி உள்ளான். ஆனால், அதற்கு இளம் பெண் மறுக்கவே, அந்த பெண் தினமும் பயணம் செய்யும் பேருந்து ஓட்டுநர் விஜயகுமாருக்கு, அந்த பெண்ணின் நிர்வாண வீடியோவை அனுப்பி உள்ளார். இதனையடுத்து, அந்த ஓட்டுநர் தனது சக நண்பர்களுக்கு அந்த வீடியோவை அனுப்பி உள்ளார்.

இதனால், அதிர்ந்துபோன மாணவி, போலீசில் சொன்னால் தனக்கு அசிங்கம் என்பதால், தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Whatsapp video call woman

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தும்போது, வரதராஜன் என்பவர் பற்றி இளம் பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து. வரதராஜன் தலைமறைவான நிலையில், பேருந்து ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் சங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.