தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ரெஜினா.கடைசியாக தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார்.பார்ட்டி,நெஞ்சம் மறப்பதில்லை படங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VJ Sabu Joseph Joins Regina Caarthick Raju Film

அருண் விஜய் நடிக்கும் AV 31,விஷால் நடிக்கும் சக்ரா,கசடதபற உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் அடுத்த படத்தைதிருடன் போலீஸ்,உள்குத்து,கண்ணாடி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் ராஜு இயக்குகிறார்.

VJ Sabu Joseph Joins Regina Caarthick Raju Film

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தின் எடிட்டராக வல்லினம்,தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் பண்ணியாற்றிய விஜே சபு ஜோசப் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

VJ Sabu Joseph Joins Regina Caarthick Raju Film