கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். அரசு அறிவித்த இந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்பட்டு அனைத்து பிரபலங்களும் தங்கள் வீட்டிலேயே உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு பணிகளை செய்து வருகின்றனர்.

VJRamya

இந்நிலையில் தொகுப்பாளினியும் நடிகையுமான VJ ரம்யா வீட்டிலிருந்தே உடற்பயிற்சி செய்வது எப்படி என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

VJRamya

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்ய விரும்பும் 89% பேருக்கு இந்த வீடியோவை இணைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனது வீடியோவை பார்த்து கார்டியோ சர்க்யூட் ஒர்க் அவுட்டை வீட்டிலிருந்தே செய்து உங்கள் அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள் என பதிவு செய்துள்ளார்.