சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக திகழ்ந்து வருபவர் மணிமேகலை.2010-ல் சன் மியூசிக் சேனலில் தனது பணியை தொடங்கினார் மணிமேகலை.தொடர்ந்து பல ஹிட் ஷோக்களை ஹோஸ்ட் செய்த மணிமேகலை சன் டிவி,சன் நியூஸ் உள்ளிட்ட சேனல்களிலும் பணியாற்றியுள்ளார்.சிறப்பு நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் தொகுப்பாளினியாக இருந்துள்ளார் மணிமேகலை.

சில சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் ஆடியோ லாஞ்ச்களையும் மணிமேகலை தொகுத்து வழங்கியுள்ளார்.உதவி நடன இயக்குனராக இருந்த ஹுசைனை காதலித்து கடந்த 2017-ல் கரம் பிடித்தார் மணிமேகலை.திருமணத்தை தொடர்ந்து சன் டிவியில் இருந்து பிரேக் எடுத்த மணிமேகலை சிறிய இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் இணைந்தார்.

விஜய் டிவியின் பிரபல கேம் ஷோவான Mr and Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவர் ஹுசைன் உடன் கலந்துகொண்டார்.இந்த நிகழ்ச்சியில் 3ஆவது இடத்தை பிடித்து அசத்தினார் மணிமேகலை.இதனை தொடர்ந்து விஜய் டிவியின் சமீபத்திய ஹிட் தொடரான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று பல ரசிகர்களை பெற்றிருந்ததார்.தற்போது சில சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அவ்வப்போது தனது வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை வீடியோவாக பகிர்ந்து வருவார் மணிமேகலை அப்படி சில நாட்களுக்கு முன் தங்கள் கார் விபத்துக்கு உள்ளானது குறித்த ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார்.ஜாலியாக இவர் இந்த வீடீயோவை பதிவிட்டிருந்தாலும் இனி அனைவரும் கவனமாக வண்டி ஓட்டவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.