சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

VJ Chitra Debut Movie Calls

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

VJ Chitra Debut Movie Calls

இவர் தற்போது கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அருவி போன்ற ஒரு திரில்லர் படமாக இந்த படம் இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.சின்னத்திரையை போல வெள்ளித்திரையிலும் வெற்றிபெற கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

VJ Chitra Debut Movie Calls