திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார். 

மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும். 

கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் விவேக். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் விவேக் இணையவாசிகளுக்கு பயனுள்ள பதிவுகளை பகிர்ந்து வருகிறார். அவர் குறித்த மீம்ஸாக இருந்தாலும், அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பகிர்வார்.  

இந்நிலையில் ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தி அசத்தியுள்ளார் விவேக். வெள்ளை நிற ஆடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிகவும் அழகாக இருக்கிறார் விவேக். இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், என் சமீபத்திய போட்டோ ஷூட் திரையுலகாலும் பிறராலும் பாராட்டப் படுகிறது. அதற்கு முழு காரணம் காஸ்டியூம் ஸ்டைலிஸ்ட் சத்யாவும் அவரது குழுவும் தான் என்று பாராட்டியுள்ளார் விவேக். விவேக்கின் இந்த போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் விவேக் அவர்களை பாராட்டி வருகின்றனர். 

உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் விவேக். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 படத்திலும் நடித்துள்ளார் விவேக்.