தமிழ் திரையுலகில் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதர். இவர் நடிப்பில் இந்தியன் 2, அரண்மனை 3 போன்ற படங்கள் வெளியாகவுள்ளது. சில நாட்களுக்கு முன்பு ட்விட்டருக்கு குட்பை கூறியவர், தற்போது மீண்டும் ஆக்ட்டிவாக பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

Vivekh Appreciates Vadivelu And His Humour

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால், தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் இந்த சூழலில், மீம்ஸ் கொண்டு இணையத்தை தெறிக்க விடுகின்றனர் நெட்டிசன்கள். திரைப்படமாக இருந்தாலும், மீம்ஸாக இருந்தாலும் 90ஸ் கிட்ஸை நகைச்சுவையில் மிதக்க வைத்த பெருமை வடிவேலு மற்றும் விவேக்கையே சேரும். 

Vivekh Appreciates Vadivelu And His Humour

இந்நிலையில் ட்விட்டர் வாசி ஒருவர், மீம் கிரியேட்டர்ஸ் தலைவர் என்றால் அது வடிவேலு தான் என புகழ்ந்துள்ளார். அதற்கு பதிலளித்த விவேக், உண்மை. வடிவேலுவைப் போல் மீம் கிரியேட்டர்ஸ்க்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் எவரும் இல்லை. வாழ்க அவர் நகைச்சுவைப் பணி என்று புகழ்ந்து பதிவு செய்துள்ளார். சக நடிகர்களுக்கு இடையே போட்டி இருக்கலாம் பொறாமை இருக்க கூடாது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.