கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தினமும் அதிகரித்து வருகிறது.இதனை அடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு மக்கள் பத்திரமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக இல்லை.உலகத்தையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்களும் பாதித்துள்ளன.சினிமாத்துறையை பொறுத்தவரை திரையரங்குகள் மூன்று மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன.சினிமா,சீரியல் என்று அனைத்து விதமான ஷூட்டிங்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.சில இடங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன,ஷூட்டிங்குகள் ஆரம்பித்தன.

மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பதாலும்,ஷூட்டிங்குகள் நடைபெறாததாலும் ஹிட்டான தொடர்களையும்,படங்களையும் டிவி சேனல்கள் போட்டி போட்டு ஒளிபரப்பி வருகின்றனர்.தற்போது ஒளிபரப்பாகி வந்த விறுவிறுப்பான தொடர்களையும் முதலில் இருந்து ஒளிபரப்பி வருகின்றனர்.பலரும் இந்த தொடர்களையும்,நிகழ்ச்சிகளையும்,படங்களையும் பார்த்து வருகின்றனர்.

அதிகம் மக்களால் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் லிஸ்டை BARC நிறுவனம் வாராவாரம் வெளியிட்டு வந்தனர்.கடந்த வாரத்திற்கான லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது இதில் தல அஜித் நடிப்பில் சென்ற வருடம் பொங்கலுக்கு வெளியாகி சக்கைபோடு போட்ட விஸ்வாசம் திரைப்படம் 1.61 கோடி பார்வையாளர்களை பெற்று கடந்த வாராதில் முதலிடம் பிடித்துள்ளது.மேலும் இதுவரை இந்த லாக்டவுன் நேரத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும் விஸ்வாசம் திரைப்படம் படைத்துள்ளது.இதனை அஜித் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

விஸ்வாசம் படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.அனிகா,தம்பி ராமையா,ரோபோ ஷங்கர்,ஜெகபதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கியிருந்தார்.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படம் சன் டிவியில் மூன்று முறை ஒளிபரப்பட்டபோதும் சாதனை படைத்துள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.