திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். தனது அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு டீஸரை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும், ரசிகர்கள் அனுமதி இருந்தால் மட்டுமே வெளியிடுவதாவும் தெரிவித்திருந்தார். பெரும்பாலான ரசிகர்கள் அவரிடம் டீஸரை வெளியிடும்படி கேட்டிருந்தனர்.

VishnuVishal

அதன் படி தற்போது அவர் நடித்த மோகன்தாஸ் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. காந்தியின் முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் காந்தியத்தை பேசக்கூடிய படமாக இது இருக்கலாம் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். டீஸரின் துவக்கத்திலேயே காந்தியின் புகழ்பெற்ற வாசகமான தீயதை பார்க்காதே, கேட்காதே, பேசாதே என்பதற்கேற்ப மூன்று குரங்குகள் காட்டப்படுகிறது. 

Vishnu Vishal VishnuVishal

அதன் பின்னணியில் விஷ்ணு விஷால்  வெறித்தனமாக ஒரு கொலை செய்கிறார். பின்னர் சர்வ சாதரணமாக நடந்து வந்து ரத்தம் தெறித்த தனது உடைகளை சலவை செய்கிறார். முரளி கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்கிறார். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.