புரட்சி தளபதி விஷால் மற்றும் சுந்தர்.சி கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஆக்ஷன். தற்போது தனது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் விஷால். சக்ரா என்று பெயரிட்டுள்ள போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.

chakra

இப்படத்தில் விஷால் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. டைட்டிலில், ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மெடல் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் லாரி ரிம்மை கையில் தூக்கி அடிப்பது போல் உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

chakra

சக்ரா படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்குகிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். மேலும் ரெஜினா கசன்ட்ரா, மனோ பாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.