தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷால் அடுத்ததாக கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான எனிமி படத்தின் தயாரிப்பு நிறுவனமான மினி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் Pan இந்தியா திரைப்படமாக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். S.J.சூர்யா  வில்லனாக மிரட்ட உள்ள மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்

இதனிடையே தற்போது இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் லத்திசார்ஜ் படத்தில் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வருகிறார். ராணா புரோடக்சன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கும் உருவாகும் லத்தி சார்ஜ் படத்தில்  சுனைனா கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த வரிசையில் முன்னதாக  விஷால் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக ரிலீஸாகவுள்ளது வீரமே வாகை சூடும் திரைப்படம். அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி வீரமே வாகை சூடும் திரைப்படத்தை தயாரித்துள்ளது. டிம்பிள் ஹயாத்தி, ரவீனா ரவி மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

உலகமெங்கும் திரையரங்குகளில் வருகிற ஜனவரி 26ஆம் தேதி ரிலீசாக உள்ள வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் தமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வீரமே வாகை சூடும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக நிறைவடைந்தது. இந்நிலையில் வருகிற ஜனவரி 19ஆம் தேதி விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.