தனக்கே உரித்தான ஸ்டைலில் அதிரடி ஆக்சன் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள திரைப்படம் லத்தி. இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

இதனை அடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். முன்னதாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் தற்போது கதாநாயகனாக விஷால் நடித்து வருகிறார்.மேலும் தளபதி விஜயின் தளபதி 67 திரைப்படத்திற்காக சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஷால் அவர்களை நேரில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடைய நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரசியமான விஷயங்களை விஷால் பகிர்ந்து கொண்டார். அப்போது தளபதி 67 திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என தெரிவித்த விஷால், வாய்ப்பு கிடைத்தால் இயக்குனராக தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் படத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

அப்போது சிலம்பரசன்.TRக்கு கொடுக்கப்பட்ட RED CARD குறித்த கேள்விக்கு பதிலளித்த போது, "RED CARDன்னா என்ன நான் இதுவரைக்கும் பார்த்ததே கிடையாது. FOOTBALLல்ல தான் RED CARD கொடுத்து ப்ளேயரை வெளியனுப்புவாங்க பாத்துருக்கேன். மத்தபடி வேற எதுவும் எனக்கு அதைப் பற்றி தெரியாது. ப்ரொடக்ஷன் கவுன்சில் தலைவரா இருந்தப்பவே நான் கேட்டு இருக்கேன் அது எங்கயாவது இருக்கான்னு" என தெரிவித்தார் 

தொடர்ந்து இப்போது சிலம்பரசன் அவர்களுடன் நட்பு எப்படி இருக்கிறது என கேட்கப்பட்ட போது, "நான் சிலம்பரசனையை நேரில் சந்தித்து ரொம்ப நாள் ஆகிவிட்டது இந்த RED CARD நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது.. தெரியவில்லை யார் இதை செய்தார்கள் என்று”  என விஷால் பதிலளித்துள்ளார். விஷாலின் அந்த முழு பேட்டி இதோ…