தமிழ் சினிமாவின் அதிரடி ஆக்ஷன் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷால் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்த லத்தி திரைப்படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.

அடுத்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் நடிகர் விஷால் இதனைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்திலும் விஷால் நடிக்க இருக்கிறார்.

இதனிடையே இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கிறார். ஏற்கனவே தொடங்கப்பட்ட துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு அடுத்த கட்டமாக லண்டனில் தொடங்கும் என விஷால் அறிவித்திருந்த நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய விஷால், சில MEMEகளுக்கு பதில் அளித்தார். அந்த வகையில் மதகஜராஜா மற்றும் துப்பறிவாளன் 2 ஆகிய படங்கள் எப்ப வரும்..? என்ற MEMEக்கு பதில் அளித்த விஷால் அடுத்த ஆண்டு(2023) ஆகஸ்ட் 12ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். துப்பறிவாளன் 2 படத்தின் ரிலீஸ் திட்டத்தை பகிர்ந்த விஷாலின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ…