செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.இதனை தொடர்ந்து இவர் நடித்த பாண்டியநாடு,நான் சிகப்பு மனிதன் ,பூஜை,கதகளி,துப்பறிவாளன்,இரும்புத்திரை என்று ஹிட் படங்களில் நடித்து அசத்தினார் விஷால்.கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான அயோக்யா திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சன் டிவியில் ஒளிபரப்பான நாம் ஒருவர் என்ற நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்கினார்.

நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆகவும்,தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார் விஷால்.நடிகர் சங்கத்தின் எலெக்ஷன் முடிந்து இன்னும் முடிவுகள் வெளிவராமல் உள்ளன.திரைப்படங்கள் திருட்டுத்தனமாக ஆன்லைன் மற்றும் சிடிகளில் வெளியாவதை கண்காணிக்கவும் அதனை தடுக்கவும் anti-piracy யூனிட் ஒன்றையும் தீவிரமாக விஷால் நடத்தி வந்தார்.இதனை தவிர 2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடவிருந்தார் ஆனால் சில காரணங்களால் இவரின் நாமினேஷன் நிராகரிக்கப்பட்டது.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மூலம் படங்களை தயாரிக்கவும்,விநியோகமும் செய்து வந்தார்.தன்னுடைய படங்கள் மட்டுமின்றி பிற நடிகர்களின் படங்களையும் தயாரித்து,விநியோகம் செய்து வந்தார் விஷால்.கே.ஜி.எப் படத்தின் முதல் பாகத்தை தமிழில் வெளியிட்டது விஷால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் ஹரி சில நாட்களுக்கு முன் காவல்துறையில் ஒரு புகார் அளித்துள்ளார்.அந்த தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்த ரம்யா என்ற பெண் ஒருவர் ரூ.45 லட்சம் மோசடி செய்துள்ளார் என்று புகார் அளித்துள்ளார்.அந்த புகாரில், வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய TDS தொகையினை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கும், தன்னுடைய கணவன் மற்றும் சகோதரரின் கணக்குகளுக்கும் ரம்யா செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷால் நிறுவனத்தின் பிரத்தியேக இ மெயிலில் உள்ள மெயில்களை அழித்துள்ளார் என குற்றம்சாட்டிய ஹரி, இது தொடர்பாக ரம்யா மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென காவல்துறையிடம் கோரிக்கை விடுத்திருந்தார். 

இது பிரபல நியூஸ் சேலான நியூஸ் 7தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரம்யா சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.அவர் கூறியுள்ளதாவது எந்தவொரு காரணமும் இல்லாமல் தன்னை வேலையை விட்டு விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் அனுப்பியதாக குற்றம்சாட்டினார். சில நாட்களுக்கு பின்னர் விஷால் தரப்பினர் தன் மீது கையாடல் புகார் தெரிவித்தாக ரம்யா தெரிவித்தார். விஷாலுடைய பண பரிமாற்றங்கள் அனைத்தும் எப்போதும் கடைசி நிமிடத்தில் தான் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். அதில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாகத்தான் தன் மீது விஷால் தரப்பினர் குற்றம் சாட்டுவதாக தெரிவித்தார். மேலும் விஷால் நிறுவனத்தில் கருப்பு பண பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் ரம்யா தெரிவித்தார்.விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவித்துள்ள ரம்யா, இது வெறுமனே பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினை மட்டுமில்லை என்றும் இதனை தாண்டி வேறொரு பெரிய மர்மம் இதில் உள்ளது என்றும் தெரிவித்தார். தமது வீட்டிற்கு வந்து, ஹரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தமக்கும், தமது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொது இடத்தில் வைத்து கணக்குகளை ஒப்படைக்க தயார் எனவும் கூறியுள்ள அவர், விஷாலுக்கு தெரியாமல் இந்த சம்பவங்கள் நடப்பதாக தெரிவித்துள்ளார்.

விஷால் மேலாளர் ஹரிகிருஷ்ணனும் வழக்கறிஞர் ஒருவரும் அடிக்கடி வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்வதாகவும், துப்பாக்கி முனையில் நிறுத்தி தன்னையும் தன் குடும்பத்தினரையும் மிரட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஷாலை நேரில் சந்தித்து பேச விஷால் வீட்டிற்கு தன் கணவன் மற்றும் தந்தையுடன் சென்றதாகவும், ஆனால் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் விஷால் அலுவலகத்தில் பல கட்டப் பஞ்சாயத்துகள் நடப்பதாக தெரிவித்துள்ள ரம்யா, விஷால் திரையில் காட்டுவது போல ஹீரோ இல்லையென்றும் அவர் நிஜத்தில் ஒரு வில்லன் என்றும் குற்றம்சாட்டியுள்ளார் ரம்யா.தான் எந்தவொரு மோசடியும் செய்யவில்லை என்று தெரிவித்த ரம்யா, தன் மீது பொய்ப்பழி சுமத்தி தன்னைக் கொலை செய்வதற்கு சதி நடப்பதாக தெரிவித்துள்ளார். காவல்துறை தன்னுடைய உயிருக்கு உரிய பாதுகாப்பு கொடுத்தால் அரசுத் தரப்பிடம் விஷால் நிறுவனம் சம்பந்தப்பட்ட எல்லா கணக்கு வழக்குகளையும் ஒப்படைக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். அடியாட்களுடன் வந்து தன்னுடைய காரை மிரட்டி எழுதிவாங்கி கொண்டதாக விஷாலின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் மீது குற்றம்சாட்டிய ரம்யா, தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக்கொண்டார். விஷால் நிறுவனத்தில் வேலைபார்த்த பலர் பொய்யான கையாடல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வெளியே அனுப்பப்பட்டதாகவும் கணக்காளர் ரம்யா தெரிவித்தார்.