தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் திகழ்பவர்கள் விஷால் மற்றும் ஆர்யா. இருவரும் சேர்ந்து பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்திலும் ஒன்றாக நடித்திருந்தனர். ஆர்யாவுக்கு சைக்கிள் ஓட்டுவது, ஒர்க்அவுட் செய்வது என்றால் எவ்வளவு பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஜிம்கள் அனைத்தும் மூடப்பட்டன. 100 நாட்கள் கழித்து சென்னையில் உடற்பயிற்சி கூடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. 

ஜிம் திறந்த உடன் ஆர்யா ஒர்க்அவுட் செய்ய அங்கு சென்றுவிட்டார். ஆர்யா தன் நண்பர் விஷாலுடன் சேர்ந்து ஒர்க்அவுட் செய்திருக்கிறார். இருவரும் இணைந்து பாக்ஸிங் செய்யும் புகைப்படத்தை ஆர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் விஷால் தெம்பாகவும், சந்தோஷமாகவும் தெரிகிறார். நண்பர்களுடன் இருக்கும் போது எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் பறந்தோடி விடும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. 

விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் வைத்து ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் தந்து குணமாக்கினர். அப்பாவை கவனித்துக் கொண்டபோது விஷாலுக்கும், அவரின் மேனேஜர் ஹரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஆர்யா பகிர்ந்துள்ள புகைப்படத்தில் விஷால் தெம்புடன் இருப்பது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 

விஷால் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் சக்ரா. விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தாய் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். 

கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி படத்தில் நடித்திருந்தார் ஆர்யா. தற்போது இவர் நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆர்யாவுக்கு ஜோடியாக சாயிஷா நடித்துள்ளார். யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Boxing #fitness @chennaimmatrainingacademy

A post shared by Arya (@aryaoffl) on