செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நடித்த பாண்டியநாடு,நான் சிகப்பு மனிதன் ,பூஜை,கதகளி,துப்பறிவாளன்,இரும்புத்திரை, என்று ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.இவரது நடிப்பில் உருவான சக்ரா படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் எனிமி  விஷால்.

இவர் நடிக்கும் அடுத்த படத்தினை து பா சரவணன் இயக்குகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.டிம்பிள் ஹயாட்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கியது.

தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகையும்,டப்பிங் கலைஞருமான ரவீனா மற்றும் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் பிரபலமான அகிலன் இருவரும் நடிக்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

View this post on Instagram

A post shared by Akilan SPR (@akilan.spr)