கடாரம் கொண்டான்  படத்தின் ரிலீஸை அடுத்து சீயான் விக்ரம் மஹாவீர் கர்ணா,பொன்னியின் செல்வன்,கோப்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள சீயான் 60 படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது.

Vikram To Start Dubbing For Dhruva Natchathiram

கெளதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தாமதமாகி வந்தது.ஐஸ்வர்யா ராஜேஷ்,ரித்து வர்மா,பார்த்திபன்,சிம்ரன்,திவ்யதர்ஷினி,ராதிகா உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vikram To Start Dubbing For Dhruva Natchathiram

Ondraga என்டேர்டைன்மெண்ட்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது என்றும் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் டப்பிங் வேலைகளை துவங்கவுள்ளார் என்ற தகவலை இயக்குனர் கெளதம் மேனன் நேற்று இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.இதனை அடுத்து சீயான் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A chat...

A post shared by Gautham Vasudev Menon (@gauthamvasudevmenon) on