கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

ponniyinselvan

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என நடிகர் ரியாஸ் கான் பதிவு செய்தார். 

vikramprabhu ponniyinselvan

வரலாற்று சிறப்புமிக்க இந்த படைப்பிற்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர் திரை விரும்பிகள். படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விக்ரம் பிரபு, தனது கேரக்டர் குறித்து கலாட்டா குழுவுடன் பகிர்ந்து கொண்டார். இந்த படத்திற்காக உடல் எடையை ஏற்றி வருவதாக கூறியுள்ளார். அதற்கு தான் அடர்ந்த தாடி வளர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு மேல் படம் குறித்து எதுவும் பேசக்கூடாது என்று நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார் விக்ரம் பிரபு.