கடந்த 2016-ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் 24. சமந்தா, சரண்யா, நித்தியா மேனன், சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர். விக்ரம் கே குமார் இயக்கிய இந்த படம் திரை ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. AR ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். வில்லன் ஆத்ரேயாவாக சூர்யா, டைம் ட்ராவல் என காட்சிகளை கச்சிதமாக செதுக்கியிருப்பார் இயக்குனர். 

Vikram K Kumar Confirms 24 Part 2 With Suriya

இந்நிலையில் இயக்குனர் விக்ரம் கே குமார் கலாட்டா முகநூல் வாயிலாக தோன்றி ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். 24 படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் அன்புடன் கேட்க, சுவையூட்டும் செய்தியை நம்முடன் பகிர்ந்து கொண்டார். 24 படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது, இதன் இரண்டாம் பாக கதையை தயார் செய்யுமாறு சூர்யா சொன்னதாக குறிப்பிட்டார். 

Vikram K Kumar Confirms 24 Part 2 With Suriya

வெறும் பெயருக்கென உருவாக்காமல், நல்ல கதைக்களம் மற்றும் ஸ்கிரீன் பிலே இருந்தால் மட்டுமே இரண்டாம் பாகம் எடுப்பதில் உறுதியாக இருந்தோம். இன்று வரை நான் எழுதிய ஸ்கிரிப்ட்டுகள் என்னை திருப்தி படுத்த வில்லை. அப்படி திருப்தி செய்தால், நிச்சயம் சூர்யா சாரிடம் கூறுவேன் என்று சஸ்பென்ஸ் வைத்தார். இந்த செய்தி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.