டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படம் கோப்ரா.சீயான் விக்ரம் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Vikram Cobra First Single Thumbi Thullal ARR

Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

Vikram Cobra First Single Thumbi Thullal ARR

மியா ஜார்ஜ்,ஆனந்த் ராஜ்,மிருணாளினி,கே.எஸ்.ரவிக்குமார்,ரோபோ ஷங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கலாட்டாவுடனான சிறப்பு நேர்காணலின் போது இந்த படம் குறித்து பல சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.இந்த படத்தின் முதல் பாடலின் பெயர் தும்பி துள்ளல் என்றும் இந்த பாடலை தான் முதலில் வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.விரைவில் இந்த பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vikram Cobra First Single Thumbi Thullal ARR