மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைசி விவசாயி. இந்த திரைப்படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார். காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற சிறந்த படங்களை இயக்கியவர் மணிகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

vijaysethupathi yogibabu

மேலும் கடைசி விவசாயி படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கம் செய்துள்ளார். ட்ரைபல் ஆர்ட்ஸ் சமீர் பரத் ராமுடன் சேர்ந்து நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தை  தயாரித்துள்ளார். இந்த படத்தில் நல்லாண்டி, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

vijaysethupathi vijaysethupathi

தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியானது. விவசாயம் பற்றி பேசும் படமாக இருப்பதால், வெளியான சில நிமிடங்களிலே இணையத்தை அசத்தியது. யானைப்பாகனாக நடிகர் யோகிபாபு நடித்துள்ளார். ட்ரைலர் லிங்க் கீழே உள்ளது.